மின்சாரத்தொழிலுக்கான சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்துவதற்காக ஏற்பாடுசெய்வதற்கும்; தேசிய மின்சார மதியுரைப் பேரவையைத் தாபிப்பதற்காக ஏற்பாடு செய்வதற்கும்; இச்சட்டத்தின் நியதிகளின்படி 2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்தின்கீழ் தாபிக்கப் பட்ட இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரத்தொழிலுக்கான ஒழுங்குபடுத்துநராக விருப்பதற்கு ஏற்பாடுசெய்வதற்கும்; 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க, கம்பெனிகள் சட்டத்தின்கீழான எந்தக் கூட்டிணைக்கப்பட்ட உருவகங்களில் மின்பிறப்பாக்கம், மின்கடத்துகை, மின்விநியோகிப்பு, மின்வியாபாரம், மின்வழங்குகை மற்றும் மின்பெறுகை சம்பந்தமான எல்லாச் செயற்பாடுகளும் உரித்தாக்கப்படவேண்டுமோ அந்தக் கூட்டிணைக்கப்பட்ட உருவகங்களின் கூட்டிணைப்புக்கு ஏற்புடையற்பாலனவான சட்டவாக்க வழிமுறைகளை ஏற்பாடுசெய்வதற்கும்; தொடர்புபட்ட எல்லாச் செயற்பாடுகளுக்கும் ஏற்புடையற்பாலனவாக இருக்கவேண்டிய செயல்முறைகளைக் குறித்துரைப் பதற்கும்; 1969 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, இலங்கை மின்சாரச் சபைச் சட்டத்தையும் 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க, இலங்கை மின்சாரச் சட்டத்தையும் நீக்குவதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடை நேர்விளைவான எல்லாக் கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டம்.