பொருளாதார நிலைமாற்றம் மீதான தேசியக் கொள்கைக்கான ஏற்பாட்டைச் செய்வதற்கும்; இலங்கை பொருளாதார ஆணைக்குழு, இலங்கை முதலீட்டு வலயங்கள், சர்வதேச வியாபாரத்திற்காக அலுவலகம், தேசிய உற்பத்தித்திறன் ஆணைக்குழு, இலங்கைப் பொருளாதார மற்றும் சர்வதேச வியாபாரத்திற்கான நிறுவகம் ஆகியவற்றை தாபிப்பதற்கும்; 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க இலங்கை முதலீட்டு சபை சட்டத்தை நீக்கஞ் செய்வதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான எல்லாக் கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வதற்கானதொரு சட்டம்.