2025 மே மாத நிலவரப்படி, ஐ.எம்.எப். (IMF) இன் 17வது திட்டத்தின் கீழ் இலங்கையின் முன்னேற்ற நிலை தொடர்பில் வெரிட்டே ரிசர்ச் மேற்கொண்ட கண்காணிப்பில் பின்வரும் தரவுகள் வெளிப்படுகின்றன:
1. நிறைவேற்றப்பட்டவை – 10%
2. நிறைவேற்றப்படாதவை – 5%
3. முன்னேற்றம் தெரியாதவை – 17%
4. நிலுவையில் உள்ளவை – 68%
நிறைவேற்றப்பட்ட உறுதிமொழிகள் – 10%
இலங்கை, தன்னுடைய IMF உறுதிமொழிகளில் 10% ஐ நிறைவேற்றியுள்ளது. இந்த கணிப்பில், இதற்கு முன்னர் "முன்னேற்றம் தெளிவாக தெரியவில்லை" என வகைப்படுத்தப்பட்ட நான்கு உறுதிமொழிகள் அடங்குகின்றன.
இவை 2025 மார்ச் மாதத்திற்கான அளவுக் குறிக்கோள்களை உள்ளடக்கியவையாகும். எனினும், அவற்றை மதிப்பீடு செய்ய தேவையான தரவுகள் பிந்தைய மாதங்களில் மட்டுமே கிடைத்தன. அதன் அடிப்படையில், இப்போது இவை " நிறைவேற்றப்பட்டவை" என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
நிறைவேற்றப்படாத உறுதிமொழிகள் – 5%
IMF உறுதிமொழிகளில் 5% "நிறைவேற்றப்படாதவை" என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. அவை உறுதிசெய்யப்படக்கூடிய வகையில் நிறைவேற்றப்படாதவையாகும். இதில் பின்வரும் உறுதிமொழிகள் அடங்குகின்றன:
முன்னேற்றம் தெரியாத உறுதிமொழிகள் – 17%
2025 மே நிலவரப்படி, 17% உறுதிமொழிகள் 'முன்னேற்றம் தெரியவில்லை' என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது, இவ்வுறுதிமொழிகள் தொடர்பான முன்னேற்ற நிலையை மதிப்பீடு செய்யத் தேவையான போதுமான மற்றும் நிரூபிக்கக்கூடிய தரவுகள் இன்னும் கிடைக்கவில்லை என்பதைக் குறிக்கிறது.
நிலுவையில் உள்ள உறுதிமொழிகள் – 68%
2025 மே நிலவரப்படி, 68% உறுதிமொழிகள் தற்போது 'நிலுவையில் உள்ளது' என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வுறுதிமொழிகள், மே மாத இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டியவையாக இருந்தாலும், அவை காலத்திற்கு உரியவாறு நிறைவேற்றப்படாமல் இருந்தன. இருப்பினும், இவை IMF வேலைத்திட்டத்தின் காலக்கெடுவுக்கிணங்க பிந்தைய திகதிகளில் நிறைவேற்றப்பட உள்ளன என்று கருதப்படுகிறது.
IMF கண்காணிப்பான் என்பது, 17வது சர்வதேச நாணய நிதிய (IMF) திட்டத்தின் கீழ் இலங்கையின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் பொதுமக்கள் அணுகக்கூடிய பகிரங்கமான ஒரே ஒரு தளமாகும். இத் தளம், வெரிட்டே ரிசர்ச் நடத்தும் பாராளுமன்ற மேற்பார்வை முயற்சியான Manthri.lk இன் தொழில்நுட்ப மற்றும் உள்ளடக்க அனுசரணையுடன் வழங்கப்படுகிறது.
மேலதிக விபரங்களுக்கு, தயவுசெய்து இவ்விணைய முகவரியை அணுகவும்:
🔗 https://manthri.lk/ta/imf_tracker